தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்

தனியார் ஊழியர்களுக்கு தூரத்திற்கமைய விடுமுறை வழங்கப்பட வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்

by Staff Writer 15-11-2019 | 3:55 PM
Colombo (News 1st) நாளை (16) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தனியார் ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. பணியிடங்கள் அமைந்துள்ள தூரத்திற்கு அமைய விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் கூறியுள்ளார். தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்காளர் ஒருவருக்கு குறைந்தது 4 அல்லது 5 மணித்தியாலங்கள் விடுமுறை வழங்கப்படல் அவசியம் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்காளர் கடமையாற்றும் அலுவலகத்திற்கும் இடையிலான தூரத்திற்கு அமைய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தூரத்திற்கமைய, ஊதியத்துடன் ஒருநாள் அல்லது ஒன்றரை நாள் அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது அவசியமாகும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.