பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி

பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி

பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2019 | 7:30 pm

பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சிந்த் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள மிதி, சாசி, ராம் சிங் சோதோ உள்ளிட்ட கிராமங்களில் மின்னல் தாக்கியதில் 10 பெண்கள், சிறுவர்கள் உட்பட இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்