தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2019 | 4:56 pm

Colombo (News 1st) உணவு விசமடைந்ததன் காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு ரோயல் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகளுக்கு நாளைய தினம் திட்டமிடப்பட்டவாறு சேவையில் ஈடுபட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

தேசிய தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க மற்றும் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் இன்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சுகயீனமுற்றவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களால் நாளைய தினம் உரிய முறையில் கடமையில் ஈடுபட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்