கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2019 | 3:16 pm

Colombo (News 1st) ​கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்​கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என பிரீமா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் வாழ்க்கை செலவு குழுவின் அனுமதியின்றி அதிகரிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோதுமை மாவின் விலை இன்று இரவு முதல் 8 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் மத்தியில் விலை அதிகரிப்பு என்ற குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்