அதிவேக வீதிகளில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2019 | 3:45 pm

Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அனைத்து அதிவேக வீதிகளிலும் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், 10 ரூபா முதல் 20 ரூபா வரை பஸ் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகம்புர – காலி இடையில் தற்போது அறவிடப்படும் 420 ரூபா பஸ் கட்டணம் 410 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.

மாகம்புர – மாத்தறை இடையில் அறவிடப்படும் 530 ரூபா பஸ் கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அந்த பாதையூடான புதிய கட்டணம் 520 ரூபாவாகும்.

கடவத்த – கெரவலப்பிட்டிய வௌிச்சுற்றுவட்டம் அதிவேக வீதியுடன் இணைவதால், அதிவேக வீதியுடனான போக்குவரத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் பயனை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இன்று நள்ளிரவு தொடக்கம் அனைத்து அதிவேக வீதிகளிலும் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்