தேர்தல் சட்டங்களை மீறி போஸ்டர்கள் விநியோகம்

தேர்தல் சட்டங்களை மீறி போஸ்டர்கள் விநியோகம்: ஒருவர் கைது

by Staff Writer 14-11-2019 | 8:28 PM
Colombo (News 1st) அமைதி காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான ஒரு தொகை சுவரொட்டிகளை கண்டி பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கண்டியில் தனியார் பொதிகளை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த சுவரொட்டிகள் விநியோகிக்கப்படுவதாக, ஜாதிக ஹெல உறுமயவின் கண்டி மாவட்ட இணைப்பதிகாரி துஷார சுவர்ணதிலக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொதிகளை விநியோகிக்கும் நிறுவனத்திடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கண்டி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டை பரிசீலனை செய்த போது இந்த போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் போஸ்டர்களை வீடு வீடாக விநியோகித்த ஒருவரை தும்மலசூரிய - வீரகொடியான பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 155 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.