சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

by Staff Writer 14-11-2019 | 7:40 AM
Colombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலையால் மலையகப் பகுதிகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியல் பிரகாரம், கோவா ஒரு கிலோகிராம் 130 ரூபாவாகவும் கரட் ஒரு கிலோகிராம் 200 ரூபாவாகவும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 200 ரூபாவாகவும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 140 ரூபாவாகவும் சலாது ஒரு கிலோகிராம் 250 ரூபாவாகவும் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நிலவும் சீரற்ற காலநிலையால் பெருமளவிலான மரக்கறிகள் அழிவடைந்தமையே, விலை அதிகரிப்பிற்கான காரணமென நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.