வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று மூடப்படுகிறது

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று மூடப்படுகிறது

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று மூடப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2019 | 7:46 am

Colombo (News 1st) வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று (14) மூடப்படவுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் சில மாணவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரத் திணைக்களத்தினால் பாடசாலை சூழல் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையில் பாடசாலையில் டெங்கு நுளம்பு பெருகும் பகுதிகள் சுகாதாரப் பகுதியினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சூழலை டெங்கற்ற பிரதேசமாக மாற்ற சுகாதார செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால் இன்றைய தினம் பாடசாலையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்