மக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து சேவை

மக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து சேவை

மக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து சேவை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2019 | 1:22 pm

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி 150 இற்கும் மேற்பட்ட பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து தூர இடங்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு சபையின் பொது முகாமையாளர் ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் நலன் கருதி, மேலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை – கொழும்பு கோட்டைக்கு இடையில் 2 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாளாந்த சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் வசதி கருதி, மேலதிகமாக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்