தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 83 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 83 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 83 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2019 | 5:43 pm

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசியல்வாதி ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் தேர்தலுடன் தொடர்புடைய 214 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 3687 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட்தை மீறியமை குறித்து பதிவாகியுள்ளன.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்