சுயாதீன தொலைக்காட்சிக்கு எதிராக M. Entertainment தனியார் நிறுவனம் வழக்குத் தாக்கல்

சுயாதீன தொலைக்காட்சிக்கு எதிராக M. Entertainment தனியார் நிறுவனம் வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2019 | 7:20 pm

Colombo (News 1st) Asterix: The Secret of the Magic Potion திரைப்படத்தை இலங்கையில் ஔிபரப்புவதற்கான உரிமையுள்ள M. Entertainment தனியார் நிறுவனம் சுயாதீனத் தொலைக்காட்சிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு மற்றும் 300 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தது.

M. Entertainment தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான Julius & Creasy சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தமது தரப்பு நிறுவனத்தின் உரிமைகளை மீறும் வகையில், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி குறித்த திரைப்படத்தை சிங்கள மொழியில் மாற்றி சுயாதீனத் தொலைக்காட்சி ஔிபரப்பியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

சட்டத்தரணிகளின் விளக்கத்தை ஆராய்ந்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க, சுயாதீனத் தொலைக்காட்சி அதிகாரிகளை டிசம்பர் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்