சிம்பாப்வேயில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

சிம்பாப்வேயில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

சிம்பாப்வேயில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Nov, 2019 | 4:32 pm

Colombo (News 1st) சிம்பாப்வேயில் ஹவாங்கே தேசிய பூங்காவில் பசியால் மேலும் சுமார் 150 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதனால் அந்நாட்டில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றித் தவிக்கின்றனர்.

பஞ்சம் மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. வறட்சி காரணமாக அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில் 2 மாதத்தில் 55 யானைகள் பசியால் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியானது.

இந்த நிலையில், அங்கு அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால், கடுமையான வறட்சி நீடிக்கிறது. நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் உயிரிழந்துள்ளன.

தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகளைக் காப்பாற்றும் நோக்கில் 2000 யானைகள், 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டக சிவிங்கிகள் ஆகிய விலங்குகளை வேறு இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்