பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர்

பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர் ஒருவர் தம்மைத் தாமே அறிவிப்பு

by Staff Writer 13-11-2019 | 11:04 AM
Colomb (News 1st) பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் அனெஸ் (Jeanine Anez) தம்மைத் தாமே அறிவித்துள்ளார். பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ், பதவியை இராஜினாமா செய்ததையடுத்து செனட் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜீனைன் அனெஸ் இடைக்கால ஜனாதிபதியாக தம்மைத் தாமே அறிவித்துள்ளார். மொறலஸின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமர்விலிருந்து வெளியேறிய நிலையில், குறித்த பெண் செனட்டரை ஜனாதிபதியாக அங்கீகரிப்பதற்கு போதிய பெரும்பான்மை இருக்கவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அரசிலமைப்பின் பிரகாரம் தாமே அதிகார வரிசையில் அடுத்தநிலையில் உள்ளதாகவும் விரைவில் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் ஜீனைன் அனெஸ் கூறியுள்ளார். இந்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பில் ஆர்வம் கொண்ட வலதுசாரி செனட்டர் என ஜீனைனை குறிப்பிட்டுள்ள மொறலஸ், ஜீனைனின் இந்த அறிவிப்பை கண்டித்துள்ளார்.