கொழும்பு காற்றில் தூசுதுகள்களின் செறிவு அதிகரிப்பு

கொழும்பு நகர் காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 13-11-2019 | 10:42 AM
Colombo (News 1st) கொழும்பு நகர் காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி தற்போது 100 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாச ​நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் திறந்தவௌியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் புதுடில்லியில் ஏற்பட்ட வளி மாசடைவு காரணமாக காற்றுடன் தூசு துகள்கள் கலக்கின்றமை அதிகரித்துள்ளது.