நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு

நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு

நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2019 | 9:42 am

Colombo (News 1st) நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், இந்த வருடத்தில் உயர்மட்டத்தை அண்மித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 வீதமாகவும்
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 வீதமாகவும்
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90.5 வீதமாகவும்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87.7 வீதமாகவும்
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.2 வீதமாகவும்
ரன்தெணிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 49.2 வீதமாகவும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்