by Chandrasekaram Chandravadani 12-11-2019 | 11:21 AM
Colombo (News 1st) ஹொங்காங்கில் பாதுகாப்புத் தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி மற்றுமொரு தினத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சத்தினால் இன்றைய தினம் சில பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியன மூடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, ஹொங்காங் பிராந்தியத்தின் பல்வேறு ரயில் மார்க்கங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக அல்லது தாமதமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்துவதுடன், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.