ஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்

ஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்

ஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2019 | 1:11 pm

Colombo (News 1st) 214 கிலோகிராம் ஹெரோயின் தொகை நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல்களை ஆராய்ந்ததில், இது குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து ஹெரோயின் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான், துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள கடத்தல்கார்களால் ஹெரோயின் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

214 கிலோகிராம் ஹெரோயினுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்