பாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி

பாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி

பாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Nov, 2019 | 12:55 pm

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலை அடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் தனது 90ஆவது வயதில் தடம்பதித்த லதா மங்கேஷ்கர், ஆயிரத்திற்கும் அதிக ஹிந்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

ஹிந்தி மட்டுமன்றி அவர் தமிழ் உள்ளிட்ட வேறு பல மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்