நாட்டை முன்னேற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்குமாறு அனுரகுமார கோரிக்கை

நாட்டை முன்னேற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்குமாறு அனுரகுமார கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2019 | 9:08 pm

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு பாணந்துறையில் நேற்று (11) நடைபெற்றது.

பாணந்துறை பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாது என உறுதியளித்த ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க, அந்த பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய அறிவுள்ள, பாதுகாப்பு எச்சரிக்கைகளை புரிந்துகொளக்கூடியவர்கள் தமது தரப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

நல்லிணக்கப் பாதுகாப்பை ஏற்படுத்தி, சட்டவாட்சியை உறுதிப்படுத்தி, ஊழல் மோசடியில்லாத அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

முன்னேற்றக்கூடிய நிலையில் உள்ள நாட்டை, முன்னேற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்குமாறும் அனுரகுமார கோரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்