அனைத்து குளங்களையும் புனரமைப்பதாக சஜித் உறுதி

2 வருடங்களுக்குள் அனைத்து குளங்களையும் புனரமைப்பதாக சஜித் வாக்குறுதி

by Staff Writer 11-11-2019 | 8:31 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (11) 10 இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். சஜித் பிரேமதாசவின் வெற்றியைத் தீர்மானிக்கும் மக்கள் சந்திப்பு இன்று கல்கமுவவில் இடம்பெற்றது.
குளங்களை மேம்படுத்தும் திட்டம் ஊடாக குளங்கள் சிலவற்றை 2 வருடங்களுக்குள் மீள் அபிவிருத்தி செய்வேன் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு உள்வாங்கும்போது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் பின்னால் சென்று கெஞ்சும் அரசியலை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் உரிய வகையில் கல்வியறிவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவேன் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். குற்றம் நிரூபிக்கப்பட்ட பயங்கரவாதிகள், குற்றம் நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் வர்ததகர்கள், குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களை எனது ஆட்சிக்காலத்தில் விடுவிப்பது இல்லை என்பதை இந்த சந்ததர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றதாக
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று மாலை ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகப் போட்டியிடும் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்லியாஸ் ஐதுருஸ் மொஹமட் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவினை வழங்கியுள்ளார்.