தற்காலிக அடையாள அட்டைகள் இன்று முதல்

தற்காலிக அடையாள அட்டைகள் இன்று முதல்

by Fazlullah Mubarak 11-11-2019 | 11:19 AM

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இன்று (11) முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டன. இவை கடந்த 9 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய நாளை மறுதினம் நண்பகல் வரை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்த தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் ஏதும் இல்லையெனின், உடனடியாக கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்ட உத்தியோகத்தரை அணுகி, தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.