ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியின் விடுதலைக்கான காரணம்

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியின் விடுதலைக்கான காரணம்

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியின் விடுதலைக்கான காரணம்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2019 | 8:49 pm

Colombo (News 1st) பலரது கோரிக்கைகள் மற்றும் விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே, இராஜகிரிய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த ஷிரமந்த ஜூட் அந்தனி ஜயமஹவை ஜனாதிபதி பொது மன்னிப்பில் கீழ் விடுதலை செய்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீண்ட விளக்கம் வழங்கும் வகையில் ஜனாதிபதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த இளைஞருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்காகத் தலையிட்டு இணைப்புச் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேரர் இது குறித்து உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றையும் விடுத்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சுயமான புனர்வாழ்வு பெற்றுள்ள படித்த கைதிகளுக்கு பொது மனிப்பு வழங்குவதற்கு தமது ஆசீர்வாதம் கிடைப்பதாக பத்தேகம சமித்த தேரர், கெரதேவல புஞ்சாரத்தன தேரர் தென் மாகாண கத்தோலிக்க சபையின் அருத் தந்தை ரேமன் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சட்டத்தரணிகள், முன்னாள் நீதிபதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இது தொடர்பில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்