யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2019 | 2:58 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு இன்று (11) முதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து வாராந்தம் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்னையிலிருந்து காலை 10.35 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் குறித்த விமானம் நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என இந்திய தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பகல் 12.45 மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை சென்றடையவுள்ளது.

தனியாருக்கு சொந்தமான விமானமொன்று கடந்த வௌ்ளிக்கிழமை, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.M.C. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்