பொலிவிய ஜனாதிபதி இராஜினாமா

பொலிவிய ஜனாதிபதி இராஜினாமா

by Staff Writer 11-11-2019 | 3:02 PM
Colombo (News 1st) பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ் (Evo Morales) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் கொந்தளிப்பை அடுத்தே அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச கண்காணிப்பாளர்கள் வலியுறுத்தியிருந்ததுடன், குறித்த தேர்தல் கையாளப்பட்ட விதம் தொடர்பில் தாம் முழுமையாகக் கண்டறிந்துள்ளதாகவும் அறிவித்திருந்தனர். குறித்த கையாளுகைகள் தொடர்பான தகவலை ஏற்றுக்கொண்ட மொறலஸ், புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தனது விருப்பத்தினை நேற்றைய தினம் வௌிப்படுத்தியிருந்தார். இருந்தபோதிலும் அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.