ஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2019 | 6:47 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) முற்பகல் அமைச்சரவை கூடியது.

இந்த அரசாங்க காலத்திற்கான இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சியை உறுதிப்படுத்துவற்கு அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகிழ்ச்சியை வௌிப்படுத்தியதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அரசாங்க காலத்திலும் இல்லாத வகையில் எவ்வித கடத்தல்களும் துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெறாத காலமாக தமது அரசாங்கம் காணப்பட்டதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்