இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2019 | 2:51 pm

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் அநுராதபுரம் – இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் மேலும் சில வான் கதவுகள் திறக்கப்படலாம் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் மூடப்பட்ட எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு பகுதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் மீண்டும் கற்பாறைகள் சரியும் அபாயம் உள்ளதா என்பது தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்