கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் பதிவு

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் பதிவு

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் பதிவு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2019 | 7:24 am

Colombo (News 1st) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை எனவும் அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது எனவும் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த டுவிட்டர் செய்தியை அடுத்து நியூஸ்பெஸ்ட், 2019 ஆம் ஆண்டு காலாண்டில் அமெரிக்காவின் பிரஜாவுரிமையை மீளப்பெற்றுக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியலை பரிசீலித்தபோது, கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரை அதில் கண்டுகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்