கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை

கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை

கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2019 | 1:04 pm

Colombo (News 1st) கம்போடியாவின் எதிர்க்கட்சித் தலைவர் கெம் சொகா (Kem Sokha), சுமார் 2 வருட வீட்டுக்காவலின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் கெம் சொகா, தேசத்துரோகம் புரிந்த குற்றச்சாட்டில் 2 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு விடுதலை அளித்து ஃப்னொம் பென் நகராட்சி நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் வௌிநாடுகளுக்கு செல்லவும் அரசியலில் ஈடுபடவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஃப்னொம் பென் நகராட்சி நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கம்போடிய தேசிய பாதுகாப்பு கட்சியின் துணை ஸ்தாபகர் சாம் ரெய்ன்சி மலேசியாவுக்கு சென்ற ஓர்நாளில் கெம் சொகா விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்போடிய தேசிய பாதுகாப்பு கட்சி, அந்நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்