கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
7 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்: லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவிப்பு

7 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்: லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவிப்பு

7 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்: லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2019 | 4:19 pm

Colombo (News 1st) சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வாக 7 இலட்சம் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை நிலவிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைவடைந்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ஜானக பத்திரன குறிப்பிட்டார்.

நாளாந்த தேவைக்கு அமைய 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாளொன்றுக்கு சுமார் 75,000 சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் ஜானக பத்திரன தெரிவித்தார்.

இதற்கமைய, தமது விற்பனை முகவர்களூடாக விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ஜானக பத்திரன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்