மீகொடயில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது

by Staff Writer 09-11-2019 | 4:31 PM
Colombo (News 1st) மீகொடயில் உள்ள ஹோட்டலொன்றில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் இளைஞர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் மதுபானம் அருந்தி இருந்ததாகவும் அவர்கள் 18 தொடக்கம் 25 வயதிற்கிடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேகநபர்களை இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.