பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு அதிகரிக்கும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு அதிகரிக்கும்: மத்திய வங்கி அறிவிப்பு

by Staff Writer 09-11-2019 | 3:43 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதமாக இருக்குமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு சகல பொருளாதார செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு இது சாதகமான ஒத்துழைப்பாக அமையுமெனவும் மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.