by Staff Writer 09-11-2019 | 3:50 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கண்டாவளை, தட்டுவாங்கொட்டி பகுதியில் சிலரால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டாவளை கிராம சேவகர் இல்லத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதன்போது, அந்த வீட்டிலிருந்த நால்வரே காயமடைந்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிலரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.