கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2019 | 4:31 pm

Colombo (News 1st) மீகொடயில் உள்ள ஹோட்டலொன்றில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் இளைஞர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் மதுபானம் அருந்தி இருந்ததாகவும் அவர்கள் 18 தொடக்கம் 25 வயதிற்கிடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்