திருவள்ளுவரைப் போல தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி இடம்பெறுவதாக ரஜினிகாந்த் தெரிவிப்பு

திருவள்ளுவரைப் போல தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி இடம்பெறுவதாக ரஜினிகாந்த் தெரிவிப்பு

திருவள்ளுவரைப் போல தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி இடம்பெறுவதாக ரஜினிகாந்த் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2019 | 8:54 pm

திருவள்ளுவரைப் போல தனக்கும் காவி சாயம் பூச பாரதிய ஜனதா கட்சியினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவி விவகாரங்களை ஊடகங்களே பூதாகரமாக்கியுள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

என் மீது காவிச்சாயம் பூச முயற்சிப்பது இந்த கால அரசியலில் சகஜம். நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். இதனை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை இருக்கிறது. அரசு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். சரியான தலைமை இல்லாமல் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது

என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்