கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் போக்குவரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் போக்குவரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் போக்குவரத்து

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2019 | 4:26 pm

Colombo (News 1st) நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இன்று முதல் விசேட ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 4 விசேட ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை குறித்த ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7.35 க்கு புறப்படவுள்ள ரயில், அதிகாலை 4.33-க்கு பதுளையை சென்றடையவுள்ளது.

அத்துடன், இரவு 8 மணிக்கு பதுளையில் இருந்து பயணிக்கவுள்ள ரயில், அதிகாலை 5.26 க்கு கொழும்பு கோட்டையை அண்மிக்கும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்