MCC நிதி: இலங்கையின் தீர்மானத்திற்கு வரவேற்பு

MCC நிதியை பெற்றுக்கொள்ளும் தீர்மானத்திற்கு அமெரிக்கா பாராட்டு

by Staff Writer 08-11-2019 | 3:45 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் ஊடாக குறைந்தபட்சம் 11 மில்லியன் மக்களுக்கு நன்மை கிட்டும் என தாம் நம்புவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்படிக்கை தொடர்பான சட்டமூலத்தை நிதி அமைச்சின் இணையத்தளத்தில் தற்போது நிதி அமைச்சு வௌியிட்டுள்ளதாகவும் அதனை ஆய்வு செய்ய நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதுடன், பாராளுமன்ற அனுமதியைப் பெறவும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.