77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட முப்படைகளின் தலைமையகம் திறந்து வைப்பு

77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட முப்படைகளின் தலைமையகம் திறந்து வைப்பு

77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட முப்படைகளின் தலைமையகம் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2019 | 4:32 pm

Colombo (News 1st) பத்தரமுல்ல – அக்குரேகொட பகுதியில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட முப்படைகளின் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த கட்டடம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒரே இடத்தில் ஸ்தாபிக்கும் நோக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்