3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை

3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை

by Staff Writer 08-11-2019 | 4:02 PM
Colombo (News 1st) சுமார் மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வாக்களிப்பிற்கு பயன்படுத்துவதற்கு மாத்திரம் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார். விசேட பாதுகாப்பு கடதாசியில் அச்சிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டையில் , தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிராம உத்தியோகத்தர்களூடாக விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை சந்தித்து தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.