by Staff Writer 08-11-2019 | 3:50 PM
Colombo (News 1st) பாதுக்க - கலகெதர பகுதியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவரால் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலகெதர பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.