திரவ பெட்ரோலிய எரிவாயு கொள்வனவு செய்யப்படவுள்ளது

திரவ பெட்ரோலிய எரிவாயு கொள்வனவு செய்யப்படவுள்ளது

திரவ பெட்ரோலிய எரிவாயு கொள்வனவு செய்யப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2019 | 5:05 pm

Colombo (News 1st) திரவ பெட்ரோலிய எரிவாயு உடனடியாக கொள்வனவு செய்யப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும், இலங்கையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாகவும் அதற்கான கோரிக்கை அதிகரித்தது.

இதற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான சந்தை கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கான உடனடி பெறுகையான 12,000 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்