கொழும்பில் காற்று மாசு குறைந்தது

கொழும்பில் காற்று மாசு குறைந்து செறிவு சுட்டி வழமைக்குத் திரும்பியது

by Staff Writer 08-11-2019 | 3:33 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் அதிகரித்த தூசு துகள்களின் செறிவு சுட்டி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. தற்போது தூசு துகள்களின் செறிவு சுட்டி 50 ஆக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். கடந்த 6 ஆம் திகதி தூசு துகள்களின் செறிவு சுட்டி 148 ஆக காணப்பட்டது. ஆசிய நாடுகள் சிலவற்றில் தற்போது வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு சுட்டி அதிகரிப்பதாக சரத் பிரேமசிறி கூறினார். இந்தியாவின் புது டெல்லியில் ஏற்பட்ட வளி மாசடைவு காரணமாக காற்றுடன் தூசு துகள்கள் கலக்கின்றமை அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் மீண்டும் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு சுட்டி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.