இந்தியாவில் தமது வயல் நிலங்களில் தீ மூட்டிய 80 விவசாயிகள் கைது

இந்தியாவில் தமது வயல் நிலங்களில் தீ மூட்டிய 80 விவசாயிகள் கைது

இந்தியாவில் தமது வயல் நிலங்களில் தீ மூட்டிய 80 விவசாயிகள் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 Nov, 2019 | 5:23 pm

இந்தியாவில் வளி மாசடைவு அதிகரித்துள்ள நிலையில், தமது வயல் நிலங்களில் தீ மூட்டிய சுமார் 80 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 3 தினங்களில் 17 ஆயிரத்திற்கும் அதிக வயல் நிலங்களில் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அறுவடை முடிவடைந்ததன் பின்னர், வைக்கோலை எரிக்கின்றமையானது, தற்போது நிலவும் வளி மாசடைவு மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வயல்களில் தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் 84 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 174 விவசாயிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வருடாந்தம் 18 மில்லியன் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படுவதுடன் சுமார் 20 மில்லியன் வைக்கோல் எரிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்