by Staff Writer 07-11-2019 | 4:50 PM
Colombo (News 1st) கினிகத்ஹேன - பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்கவின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இருவரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கினிகத்ஹேன - பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் கரவனெல்ல மற்றும் கினிகத்ஹேன வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்கவின் வாகனத்தை மறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபர்களிடமிருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தின் போது மூன்று தடவை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.