ஜனநாயக போராளிகள் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

ஜனநாயக போராளிகள் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

by Staff Writer 07-11-2019 | 7:41 PM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய அரசுகளுடன் இசைந்து செல்லும், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து செயற்படும் ஒருவராக சஜித் பிரேமதாசவை தாம் கருதுவதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான கடந்த 10 ஆண்டுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் அனுகூலத்தினை தமிழினம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு அவசியமான தேர்தலாகவே இதனைக் கருதுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வாக்குப் பலத்தினை சரியான முறையில் பிரயோகிப்பதன் மூலமாக எதிர்காலத்தில் பல நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனநாயக போராளிகள் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.