மனைவி, குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மனைவி, குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மனைவி, குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 1:37 pm

Colombo (News 1st) இரத்மலானை பகுதியில் தமது இரு குழந்தைகளுடன் மனைவியைக் கொலை செய்து எரித்த கணவனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

31 வயதான மனைவியையும் 3 வயதான குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்தமை மற்றும் ஒரு வயதான ஆண் குழந்தை ஒன்றை எரித்துக் கொலை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

3 கொலைச் சம்பவங்களுக்கும் வெவ்வேறாக மரணதண்டனை விதிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்