மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரைக் கொன்றவருக்கு மரண தண்டனை

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரைக் கொன்றவருக்கு மரண தண்டனை

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரைக் கொன்றவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 3:42 pm

Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருவரை கொலை செய்தமை தொடர்பில் ஜூலம்பிட்டிய அமரே என்றழைக்கப்படும் கீகன கமகே அமரசிறி என்பவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்தின் போது கட்டுவன பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்