பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கு: புலனாய்வு பிரிவின் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கு: புலனாய்வு பிரிவின் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கு: புலனாய்வு பிரிவின் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 5:17 pm

Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, அடைத்து வைத்திருந்தமை தொடர்பில் இராணுவப் புலனாய்வு பிரிவின் 07 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடாத சிலரால் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடைத்து வைக்கும் நோக்குடன், பிரகீத் எக்னெலிகொடவை கடத்துவதற்கு சதி முயற்சியில் ஈடுபட்டமை , அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பிரபோத சிறிவர்தன உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் 7 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்