பண்டாரவளையில் கையடக்கத் தொலைபேசிகளை உயர்த்தி சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் அமோக வரவேற்பு

பண்டாரவளையில் கையடக்கத் தொலைபேசிகளை உயர்த்தி சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் அமோக வரவேற்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2019 | 9:06 pm

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட பிரசாரக்கூட்டம் ஒன்று பண்டாரவளையில் நேற்று (06) நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பண்டாரவளையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது மக்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளை உயர்த்தி, வௌிச்சம் ஏற்படுத்தி வரவேற்றனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பலர் இதன்போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பண்டாரவளை மக்கள் வழங்கிய வலிமையினால் அன்னம் அமோக வெற்றியைப் பெறும் என தாம் நம்புவதாக இதன்போது சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டயீட்டினை வழங்கி, அது தொடர்பில் தனிப்பட்ட கண்காணிப்பினை மேற்கொள்வதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்