நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கப் போவதில்லை: சஜித் பிரேமதாச

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கப் போவதில்லை: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2019 | 8:49 pm

Colombo (News 1st) நாட்டினை பாதுகாக்கும் படைவீரர்களை கௌரவிக்கும் நோக்கில் புதிய ஜனநாயக முன்னணியின் ரணவிரு கொள்கை இன்று கொழும்பில் வௌியிடப்பட்டது.

இதன்போது, ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய பாதுகாப்பு, ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் மேம்படுத்தல், பதவி உயர்வு, திறன் விருத்தி மற்றும் தொழில் நிபுணத்துவம் உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தில் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது மீண்டும் தெரிவித்தார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் சுயாதீனத்திற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் தீங்கு ஏற்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்