ட்ரம்ப் மீதான குற்றப்பிரேரணை; விசாரணை அடுத்த வாரம்

ட்ரம்ப்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அடுத்த வாரம்

by Staff Writer 07-11-2019 | 8:17 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான முதலாவது விசாரணை அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின் முதலாவது அமர்வில் இராஜாங்கத் திணைக்களத்தின் 3 அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளனர். எவ்வாறாயினும், பிரதிநிதிகள் சபையின் 3 பிரதான குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூடிய அறையில் சாட்சியங்களைச் செவிமடுத்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக பகிரங்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு யுக்ரைன் அரசாங்கத்தை வலியுறுத்தியதாக தெரிவித்து ட்ரம்ப்புக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவர் பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தப்படாத ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். ஜோ பைடனின் மகன் Hunter Biden யுக்ரைனிய எரிவாயு நிறுவனமொன்றில் முன்னர் கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏனைய செய்திகள்